முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா, உக்ரைன் குறித்து புடினுடன் பேசுவேன்:டிரம்ப் அறிவிப்பு

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ரஷிய அதிபர் விளாதிமீர் புடினை நேரில் சந்திக்கும்போது சிரியா, உக்ரைன் உள்ளிட்ட உலக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரஷிய அதிபரை ஃபின்லாந்தில் சந்தித்துப் பேசும்போது, உக்ரைன் விவகாரம் குறித்தும், சிரியா விவகாரம் குறித்தும் விவாதிப்பேன். மேலும், அமெரிக்கத் தேர்தல் குறித்தும் புடினுடன் பேசுவேன். அமெரிக்கத் தேர்தலில் வெளிநபர்கள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை.

உலகில் அமைதியை ஏற்படுத்துவது குறித்தும், அதன் மூலம் ஆயுதங்கள், தளவாடங்களுக்காக நாங்கள் செலவழிக்கும் கோடிக்கணக்கான டாலரை மிச்சப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார் அவர்.

ரஷியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாதிமீர் புடின் மீண்டும் வெற்றி பெற்றார். அதையடுத்து, அவருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, இரு தலைவர்களுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், டிரம்ப் - புடின் இடையிலான சந்திப்பு அமெரிக்காவிலோ, ரஷியாவிலோ இல்லாமல் மூன்றாவதாக ஒரு நாட்டில் நடைபெறும் என்று ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் புடினின் ஆலோசகர் யூரி உஷகோவ் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சந்திப்பு, பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் ஜூலை மாதம் 16-ஆம் தேதி நடைபெறும் என அமெரிக்க அதிபர் மாளிகை அறிவித்தது.

"உக்ரைனின் ஒரு அங்கமாக இருந்த கிரைமியா பகுதியை ரஷியா இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களா' என்ற கேள்விக்கு "அதுகுறித்து பிறகு பார்க்கலாம்' என்று டிரம்ப் மழுப்பலாக பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து