முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் மத்திய அமைச்சர் தலைமையில் கடல் மீன்வளம் குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆலோசனை

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேஸ்வரம் - ராமேஸ்வரத்தில் தனியார் தங்கு விடுதியில் கடல் மீன்வளம் – இந்தியாவில் கடல் மீன்வளர்ப்பு” என்ற பொருளிலான மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு அமர்வுகளுக்கு இடையிலான கூட்டம் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் மீன்வளர்ப்பு  மற்றும் விவசாயத்தை மேம்பாடுத்துவதற்காக துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசணை கூட்டம் ராமேசுவரம் பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு கலந்துகொண்டு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கு வதற்காக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் நேற்றுக்கு முன்தினம் ராமேசுவரம் வருகை தந்தார்.பின்னர் ராமேசுவரம் பகுதியிலுள்ள அப்துல்கலாம் சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.பின்னர் கலாம் வீட்டிற்கு சென்று அப்துல்கலாம் அண்ணன் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் மற்றும் பேரன் சேக்சலீம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார்.பின்னர் மத்திய அரசின் நான்காம் ஆண்டு சாதனை மலரை கொடுத்தார்.தொடர்ந்து நேற்று காலையில் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.முன்னதாக அமைச்சரை பா.ஜ.கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன்,ராமேசுவரம் நகர் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர்கள்  வரவேற்றேனர்.பின்னர் தனுஸ்கோடி பகுதிக்கு சென்று புயழில் அழிந்துபோன பழைமையான கட்டிடங்களை பார்வையிட்டார்.அதன் பின்னர் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற ஆலோசணை கூட்டத்திற்கு  வருகை தந்தார்.அங்கு ராமநாதுபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வரவேற்றார்.அதன் பின்னர் அங்கு மத்திய அமைச்சர் கூட்டத்திற்கு தலைமை ஏற்று மீன்வளம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசணை நடத்தினர். 

   கூட்டத்திற்கு பின்   செய்தியாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் தெரிவித்தது:
 மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கடல் மீன்வளம் 2017 தேசியக் கொள்கையை அறிவிக்கை செய்துள்ளது. இந்தக் கொள்கை அடுத்த பத்தாண்டுகளுக்கான கடல் மீன்வள மேம்பாட்டை நெறிப்படுத்தும். பாரம்பரிய மீனவர்கள், அவர்களது சங்கங்கள் / அமைப்புகள் அல்லது சுயஉதவிக் குழுக்கள், மீன்பிடிப் படகு விலையில் 50 சதவீதத்தை மத்திய நிதியுதவியாக பெறுவார்கள். அதாவது, ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு ரூ. 40 லட்சம் பெறுவார்கள். கடற்கரையோரம் 200 மீ்ட்டர் ஆழமான மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மீன்வளங்கள் ஓரளவு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அல்லது மிக அதிகமாக மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்த நிலைமை பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த கவலையளிக்கும் விஷயமாகும். நீலப் புரட்சி திட்டத்தின்கீழ், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உதவி என்கிற புதிய துணைப்பகுதி இணைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.  இத்திட்டத்தின்படி, பாரம்பரிய மீனவர்கள், அவர்களது சங்கங்கள் / அமைப்புகள் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் ஆகியன மீன்பிடி படகுகளின் விலையில் 50 சதவீத மத்திய நிதியுதவியை பெறுவார்கள். இத்திட்டத்தின் அமலாக்கத்திற்காக முதல் ஆண்டுக்கு 2017-18, மத்தியப் பங்காக ரூ. 312 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பாரம்பரிய மீனவர்கள் பயனடைவார்கள். இந்தியாவின் மீன் உற்பத்தி 1.14 கோடி டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். இதில் 68 சதவீதம் உள்நாட்டு மீன்வளத் துறைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 32 சதவீதம் கடல்பகுதிகளிலிருந்து கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  2020-ஆம் ஆண்டில் உள்நாட்டு மீன் தேவை 1.5 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மீன்உற்பத்தி 1.14 கோடி டன்னாக மட்டுமே இருக்கும். இரண்டுக்கும் இடையேயுள்ள 0.36 கோடி டன் உள்நாட்டு மீன்வளர்ப்பு மற்றும் கடல் மீன்வளர்ப்பு ஆகியவற்றால் ஈடு செய்யப்படும்.கரையோரப் பகுதிகளில் 200 மீட்டர் ஆழத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மீன் வள ஆதாரங்கள் ஓரளவு பயன்படுத்தப்பட்டுள்ளன அல்லது சில நேரம் மிக அதிகமாக மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.  இந்த நிலைமை பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகுந்த கவலை அளிக்கும் விஷயம் என்று அமைச்சர் கூறினார். இது தொடர்பாக 2018 மே 17ஆம் தேதி, அனைத்துக் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் மீன்வளத்துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கடல் மீன்பிடிப்பு பற்றிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பொறுப்பான மற்றும் நிலைத்திருக்கக்கூடிய மீன்வள சீர்திருத்தங்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து கடலோர மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
கரையோரப் பகுதிகளில் கூடுதல் மீன்உற்பத்திக்கு மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன என்பதை கருத்தில் கொண்டு, அரசு கடல் மீன் வளர்ப்பை மேம்படுத்த முடிவு செய்தது. இதன் அடிப்படையில், நீலப் புரட்சி திட்டத்தின்கீழ், கடல் மீன்வளர்ப்பு துணைப் பகுதியையும் இணைத்தது. திறந்த கடல் கூண்டு மீன்பிடிப்பு மீன் பண்ணைத் தொழிலில் சுற்றுச் சூழலுக்கு உகந்த ஒரு நடவடிக்கை ஆகும். கடல் அலைகள் குறைவாக உள்ள திறந்த கடல் பகுதிகளில் இந்த முறை கையாளப்படுகிறது. கூண்டுகளில் வளர்க்கப்படும் மீன்கள் விலை மதிப்புமிக்கவை ஆகும். இதனால், கூண்டுகளில் வளர்க்கப்பட்ட மீன்களுக்கு அதிகமான ஏற்றுமதி தேவைகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த ஆலோசணை கூட்டத்தில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத்,  கிருஷ்ணாராஜ்,  பர்ஷோத்தம் ருபாலா, மத்திய இணை அமைச்சர் பென்.ராதகிருஷ்ணன்,நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்  அர்ஜுன்லால் மேஹ்வால், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து