முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூஜையுடன் துவங்கிய கழுகு-2 படப்பிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      சினிமா
Image Unavailable

Source: provided

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் வெளியான `கழுகு' படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்  துவங்கியிருக்கிறது.

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான படம் கழுகு. காதல் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

முதல் பாகத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இந்த பாகத்திலும் இணைகின்றனர். கழுகு-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மூணாரில் இன்று துவங்கியிருக்கிறது. ஜி.கே.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிங்கார வேலன் பிக்சர்ஸ் உலகம் முழுக்க ரிலீஸ் செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து