முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் தேவையை சமாளிக்க அன்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை இழுத்து வர ஐக்கிய அரபு நிறுவனம் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

சவுதி: குடிநீர் தேவையைச் சமாளிப்பதற்காக, அன்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை இழுத்து வர ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நேஷனல் அட்வைஸர் பியூரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது,
குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும், மழையை அதிகரிக்கச் செய்யவும், அன்டார்டிகா கடல் பகுதியிலிருந்து மாபெரும் பனிப்பாறைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் கடல் பகுதிக்கு இழுத்து வர திட்டமிட்டுள்ளோம். சுமார் 9,000 கி.மீ. தொலைவிலிருந்து அந்த பனிப்பாறைகளை இழுத்து வரும் திட்டத்தை, வரும் 2020-க்குள் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.

பெரிய பனிப்பாறைகளில் சராசரியாக 2,000 காலன் நீர் இருக்கும். இதனைக் கொண்டு, 10 லட்சம் மக்கள் கொண்ட பகுதியில் 5 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்க முடியும். அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடலோரப் பகுயில் பிரமாண்ட பனிப்பாறைகள் இருப்பது, அந்தப் பகுதியின் வானிலையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும். அங்கு மேகங்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு, இதுவரை வறண்டு காணப்படும் பகுதிகளில் கூட மழை பெய்யும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஐக்கிய அரபு அமீரகத்தின் தூய நீர் இருப்பு அதிகரிக்கும். இதன் மூலம், பிற நாடுகளுக்கு குடிநீர் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் அமீரகம் உருவெடுக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து