முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாக்-அவுட் சுற்றில் 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேசில்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

நெய்மர் கோல்...

ரஷ்யாவில் நடந்து வரும் உலக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ - பிரேசில் அணிகள் மோதின. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்றாலும் பிரேசில் கட்டுப்பாட்டில் பந்து இருந்தது. இதனை அடுத்து, இரண்டாம் பாதியின் 51வது நிமிடத்தில் நெய்மர் அசத்தலாக கோல் அடித்தார். 90 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிர்மிடோ மற்றொரு கோல் அடித்தார்.

பிரேசில் வெற்றி...

ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் அணிகள் நாக் அவுட் சுற்றில் வெளியேறியதால், பிரேசில் அணியும் வெளியேறும் என பலர் கணித்த நிலையில், அவர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது.

பிரேசில் அணி சாதனை

88 ஆண்டு கால உலக கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சாதனையை பிரேசில் படைத்தது. மெக்சிகோவுக்கு எதிரான 2-வது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி 2 கோல் அடித்தது. இதன் மூலம் அந்த அணி உலக கோப்பையில் மொத்தம் 228 கோல்கள் அடித்து இருக்கிறது. இதற்கு முன்பு ஜெர்மனி அணி 226 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரேசில் அணி தகர்த்து புதிய சாதனையை உருவாக்கியது.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் நேற்று ஒரு கோல் அடித்தார். பிரேசில் அணிக்காக 89-வது போட்டியில் ஆடிய அவர் அடித்த 57-வது சர்வதேச கோல் இதுவாகும். ஒட்டுமொத்த உலக கோப்பை போட்டி தொடரில் அவர் அடித்த 6-வது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து