முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் அருகே போலீஸாரல் தோண்டி எடுக்கப்பட்ட வெடி பொருட்களை வெடிமருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேஸ்வரம்; -  ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரைப்பகுதியில் மீனவர் வீட்டில் குழியிலிருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு பொருட்களை  சென்னையே சேர்ந்த வெடிமருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள்  நேற்று ஆய்வு செய்தனர்.
  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைப்பகுதி அருகே அமைந்துள்ளது  மீனவர் எடிசன் என்பவரின் வீட்டில் ஜூன் 25 ஆம் தேதி கழிவு நீர் தொட்டி அமைக்க குழி தோண்டும் போது ஆயுத குண்டு குவியல்கள் கண்டு பிடிக்கப்பட்டது.இது குறித்து தகவல்கள் அறிந்து அப்பகுதிக்கு வந்த தங்கச்சிமடம் போலீஸார்கள் குழியிலிருந்து  400 அதிநவீன இயந்திர துப்பாக்கி குண்டுகளையும், 22 பெட்டியில் 5500 இலகுரக துப்பாக்கிகுண்டுகளையும்,  4928 எஸ்.எல்,ஆர் ரவுன்ஸ் குண்டுகளையும், 199 டெனைடர் சிலாப் துப்பாக்கி குண்டுகளையும், வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 8 காப்பர் வயர் ரோல்களையும், 20 கன்னி வெடிகளையும், 87 சிக்னல் ரவுன்ஸ் குண்டுகளையும், 15 கையேறி குண்டுகளையும், 20 எம்.எஸ்.-302 ரக துப்பாக்கி குண்டுகளையும், ராக்கட் பயன் படுத்தப்படும் குண்டுகள் 20 என அதிக குதிரை திறன் கொண்ட துப்பாக்கி குண்டுகளை எடுத்தனர். இந்த குண்டுகளை கைப்பற்றிய போலீஸார்கள் பாதி குண்டுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதான கிடங்கிலும்,199 டெக்னேட்டர் சிலாப் துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 8 காப்பர் வயர் ரோல்கள், 20 கன்னி வெடிகள், 87 சிக்னல் ரவுன்ஸ் குண்டுகள், 15 கையேறி குண்டுகள், 20 எம்.எஸ்.-302 ரக துப்பாக்கி குண்டுள், ராக்கட் பயன் படுத்தப்படும் குண்டுகள் 20  குண்டுகள் ஆகிய பொருள்களை மீனவர் எடிசன் வீட்டில் குழிதோண்டி அதற்குள் மண் மூட்டைகளை வைத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்நிலையில்  மீனவர் வீட்டில் வைத்துள்ள  குண்டுகளின் செயல் திறன் குறித்து ஆய்வு செய்வதற்காக  சென்னையிலுள்ள  வெடிமருந்து கட்டுபாட்டு துறையை சேர்ந்த அதிகாரிகள் நேற்று வருகை தந்தனர்.இதில் வெடி மருந்து  கட்டுப்பாட்டுதுறையின் துணை இயக்குனர் பிரசாந்த்யாதவ் தலைமையில்,சேக்உசேன் அதிகாரி உள்பட குழுவினர்கள் தோண்டி எடுக்கப்பட்ட வெடி  பொருள்களின் தன்மை மற்றும் தற்போதயை அவற்றின் நிலைகுறித்தும் ஆய்வு நடத்தினர்.பின்னர் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் சில வெடிமருந்துகளை தனித்தனியாக ஆய்வுக்காக பாக்ஸில் ஆசிட் தண்ணீரில் எடுத்துக்கொண்டனர். அதந் பின்னர் வெடிகுண்டு கிடந்த இடத்தை பார்வையிட்டு ராமேசுவரம் டி.எஸ்பி மகேஷ்யிடம் விளக்கம் கேட்டறிந்தனர்.இந்த ஆய்வின் போது தங்கச்சிமடம் போலீஸார்கள் உடன் இருந்தனர்.மேலும்  இந்த வெடிபொருள்களை பரிசோதணை செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் வெடிகுண்டுகளை செயலிழக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும்,அதுவரை 90 மீட்டர் தொலதூரத்திற்குள் இப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் வசித்துவரும் பொதுமக்களை காலி செய்யதால் பாதுகாப்பாக இருக்கும் என  அதிகாரிகள் தெரிவித்தனர். . 
                                                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து