முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய, மாநில அரசு திட்டத்திங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்தியமந்திரி பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய மாநில அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி ராதாமோகன்சிங் தலைமையிலான குழுவினர் பாராட்டினர்.
தேசிய அளவில் பின்தங்கிய நிலையில் உள்ளதாக 117 மாவட்;டங்களை கண்டறிந்து அதனை அனைத்து வகையிலும் தன்னிறைவு பெற்ற முன்னேறிய மாவட்டங்களாக உருவாக்கிட வேண்டுமென மத்திய அரசு திட்டமிட்டு, மாநில அரசின் வழிகாட்டுதலின் பேரில் துரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதில் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தி வந்த மத்திய, மாநில அரசு திட்டங்களில் எந்தந்த திட்டங்கள் முன்னேற்றம் இல்லாமல் உள்ளன, அதன் பேரில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் துல்லியமாக கணக்கிட்டு, துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து, பல்வேறு குழுக்கள் அமைத்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மேற்குறிப்பிட்ட 117 மாவட்டங்களில் தரவரிகையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.  மாண்மிபுகு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிவுள்ளதை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி, பதிவு செய்துள்ளார்.  இதே போன்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மற்றும் மத்திய, மாநில கண்காணிப்பு அலுவல்களான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாவட்ட கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் 02.07.2018 அன்று ராமேசுவரத்தில் நடைபெற்ற கடல் சார் உயிரினங்கள் மற்றும் வேளாண்மை துறை வளர்ச்சி தொடர்பான கருத்தரங்களில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன்சிங்கும் பாராட்டினார்கள். இதன் ஒரு அங்கமாக மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன்சிங் மற்றும் இந்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டர் எஸ். நடராஜன், ஆகியோர் பரமக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கா@ர் கிராமத்திற்கு வருகை தந்து கிரிசி கல்யாண் அபியான் திட்ட செயலாக்கம் மற்றும் அதன் மூலம் பயனடைந்தோர்களிடம் நேடியாக கலந்துரையாடினார்கள். 
மத்திய வேளாண்மை துறை அமைச்சர் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பாக பேசிய நபர்கள் தங்கள் கிராமத்திற்கு கிரிசி கல்யாண் அபியான் மூலமாக திட்டங்கள் கிடைந்துள்ளதாகவும் ஆனால் குடிநீர் வசதி பற்றாக்குறையாக உள்ளதாகவும், அதனை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்குமாறும் கோரிக்கை வைத்தனர். இது குறித்து அமைச்சர் மாவட்ட கலெக்டரிடம் விபரம் கேட்ட போது தற்போது உள்@ர் குடிநீர் ஆதாரம் மூலம் தினந்தோறும் தண்ணீர் விநியோகம் செய்வதாகவும், பொதுமக்கள் பற்றாக்குறை உள்ளதாக பொதுமக்கள் தெரிவிப்பதால், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆர்.ஓ. பிளாண்ட் அமைத்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்கள். இதற்கு பதில் தெரிவித்த மத்திய அமைச்சர் இத்திட்டத்தை இரண்டு மாத காலத்திற்குள் நிறைவேற்றி கொடுக்குமாறு மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்கள். தொடந்து பேசிய மத்திய அமைச்சர் மத்திய, மாநில அரசு திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக பாராட்டியதுடன், பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஒரு சில கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றி கொடுப்பதுடன், வட்டார அளவிலான அதிகாரிகள் வாரம் ஒரு முறை கண்டிப்பாக இக்கிராமத்திற்கு வர வேண்டுமெனவும், மாவட்ட கலெக்டர் இதனை கண்காணிக்க வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து