முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் எடுத்துக்கொண்டனர்.

புதன்கிழமை, 4 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு மழைநீர் தங்குதடையின்றி முழுமையாக நிலத்தடிக்குள் சென்று நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக 01.07.2018 முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் எச்சரித்துள்ளார். அதன்படி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் மற்றும் உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த அறிவிப்பை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களிடம்  15.07.2018 முதல் முதல்கட்டமாக ரூ.500-க்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படும் எனவும், மீண்டும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதை கண்டறியப்படும் ஒவ்வொரு முறையும் ரூ.ஆயிரத்திற்கு குறையாமல் அபராதம் விதிப்பதுடன் ஒத்துழைக்க மறுக்கும் வணிகர்களது வணிக உரிமத்தை ரத்து செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டர் முனைவர்நடராஜன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.  அதன்பின்பு கலெக்டர் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களது அலுவலகங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்துவதை நூறு சதவீதம் தவிர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும் எனவும், அதேவேளையில் தங்களது குடும்பத்தார், உற்றார், உறவினர் மற்றும் சுற்றத்தார்களிடத்தில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்த்திட ஊக்குவித்திட வேண்டும் எனவும் அனைத்து துறை அரசு அலுவலர்களிடத்தில் அறிவுறுத்தினார்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் த.ஹெட்சிலீமா  அமாலினி, பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கோ.குருநாதன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர்.ஆர்.சுமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமா மகேஸ்வரி மாவட்ட சமூகநல அலுவலர் சி.குணசேகரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து