முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டி-20 போட்டிகளில் விரைவாக 2000 ரன்களை கடந்து கோலி சாதனை

புதன்கிழமை, 4 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது சர்வதேச டி-20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற  சாதனை இலக்கை எட்டினார். மேலும் 2000 என்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் அயர்லாந்தில் கோட்டை விட்டதை இங்கிலாந்தில் நிறைவேற்றி இருக்கிறார்.

சுற்றுப்பயணம்

இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி-20 போட்டியில் 1983 ரன்கள் எடுத்திருந்தார். 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

சோயிப் மாலிக்...

ஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, 2-வது ஆட்டத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2000 ரன்களை கடந்து 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

4-வது வீரர்...

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி. இவர் 56 போட்டிகளில் மிக விரைவாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2000 ரன்களை கடந்தவர்கள்

1) விராட் கோலி - 56 போட்டிகள்.
2) மெக்கல்லம் - 66 போட்டிகள்.
3) கப்தில் - 68 போட்டிகள்.
4) சோயிப் மாலிக்  - 92போட்டிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து