முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதியில் யாருடன் யார் மோதுகிறார்கள் ?

புதன்கிழமை, 4 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : ஒரு வழியாக உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளின் நாக் அவுட் சுற்றுகள் முடிவடைந்துவிட்டன. நாக் அவுட்டில் வெற்றிப் பெற்ற 8 அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதுகின்றன. காலிறுதிப் போட்டிக்கு உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரோஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை தகுதிப் பெற்றுள்ளன.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முக்கிய கட்டமான காலிறுதி ஆட்டங்கள் வரும் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் கடந்த ஜூன் 14-ஆம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், அர்ஜென்டினா போன்ற ஜாம்பவான் அணிகள் நாக் அவுட் சுற்றோடு வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றியது. ஆனால் பிரேசில், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் வெற்றிப் பெற்றது ஆறுதல் தந்துள்ளது.

உருகுவே - பிரானஸ்

உருகுவே - பிரான்ஸ் ஜூன் 6 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த இரண்டு அணிகளும் கடந்த காலங்களில் கோப்பையை வென்ற அணிகள். மேலும் பிரான்ஸூடனான சர்வதேச போட்டிகளில் உருகுவே இதுவரை தோல்வியை சந்தித்தேயில்லை. இந்தப் போட்டி நிஷ்னி நோவ்கோகிராட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது

பிரேஸில்-பெல்ஜியம்

ஜூன் 6 ஆம் தேதி 5 முறை சாம்பியன் பிரேஸில் - பெல்ஜியம் உடன் மோதுகிறது. இரவு 11.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. கஸான் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் 6 ஆவது முறையாக கோப்பையை வெல்ல பிரேசில் தீவிரம் காட்டி வருகிறது. ரெட் டெவில்ஸ் என அழைக்கப்படும் பெல்ஜியமும் சாதாரண அணியில்லை. 

ரஷ்யா - குரோஷியா

ஜூன் 7 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரஷ்யா - குரோஷியா அணிகள் மோதுகிறது. சோச்சி பிஷ்ட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. சொந்த நாட்டில் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறுவதால் ரஷ்யா சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு தகுதிப் பெற்றது. அதேபோல குரோஷியாவும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எனவே இந்தப் போட்டி மிக்க கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - ஸ்வீடன்

ஜூன் 7 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து ஸ்வீடன் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டம் சமாரா அரேனா மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் இரண்டுமே பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் இதுவரை அதிக கோல் அடித்துள்ள ஹேரி கேனை பெரிதும் நம்பி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. வீரரை பெரிதும் நம்பி களம் இறங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து