முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20-யில் அதிக ஸ்டம்பிங்: டோனி உலக சாதனை

புதன்கிழமை, 4 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் யுனைடெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து ரன் குவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

14-வது ஓவரை மோர்கன் வீசினார். இந்த ஓவரில் பேர்ஸ்டோவ், ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து ஸ்டம்பிங் செய்து எம்எஸ் டோனி, இருவரையும் டக்அவுட்டில் வெளியேற்றினார். இந்த இரண்டு ஸ்டம்பிங் மூலம் டி20 போ்டடியில் 33 பேரை அவுட்டாக்கி, அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் 32 பேரை ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றியுள்ளார். முகமது ஷேசாத் 28 ஸ்டம்பிங் உடன் 3-வது இடத்திலும், முஷ்பிகுர் ரஹிம் 26 ஸ்டம்பிங் உடன் 4-வது இடத்திலும், சங்ககரா 20 ஸ்டம்பிங் உடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து