தண்ணீர் சிக்கனம், தேவை இக்கணம்! பாத்ரூம்ல ஜோடி, ஜோடியா குளியுங்க! ரஷ்ய நகர நிர்வாகம் வினோத அட்வைஸ்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      உலகம்
water econcomy russia 2018 7 5

மாஸ்கோ : ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. தென் மேற்கு ரஷ்ய நகரமான சமராவிலும் கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. கால்பந்தாட்ட வீரர்களுக்கான உபசரிப்பு, மைதான பராமரிப்பு என தண்ணீருக்கான தேவை என்பது அங்கு அதிகமாக உள்ளது. எனவே தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி நகர நிர்வாகம் இந்த கோரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளது. அதன்படி, அந்த நகர மக்கள், ஜோடி,ஜோடியாக குளியலை முடித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கால்பந்தாட்ட வீரர்கள், கால்பந்தாட்டத்தை காண பல நாடுகளிலும் இருந்து வந்துள்ள ரசிகர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, சமரா நகர மக்கள் ஒவ்வொருவராக குளிப்பதை தவிர்த்து ஜோடியாக குளிக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளது நகர நிர்வாகம்.

சமரா நகரில் வெப்ப நிலை சற்று அதிகமாக உள்ளதால் தண்ணீரின் தேவையும் கூடியுள்ளது. இதனை கருத்தில் கொண்டே நகர நிர்வாகம் கூடுமான வரையில் கூடுதல் தண்ணீரை திறந்து விட்டு வருகிறது. இந்த தகவலை, மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து