சிரியாவில் நடந்த சண்டையில் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியின் மகன் பலி

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      உலகம்
al-Baghdadi 2018 7 5

திரிபோலி : சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மகன் சிரியாவில் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் மகன் ஹூதைஃபா அல் பத்ரி சிரிய ராணுவத்துடன் ஹோம்ஸ் மாகாணத்தில் நடந்த சண்டையின் போது உயிரிழந்துவிட்டதாக ஐஎஸ் அமைப்பின் சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அல் பாக்தாதி தற்போதும் உயிருடன் இருப்பதாகவும், அவர்தான் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து