முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் வனப் பகுதியில் யானை பலி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-- கொடைக்கானல் வனப் பகுதியில் யானை பலியானது.
 கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி வில்பட்டியை அடுத்துள்ள புலியூர் வனப் பகுதியாகும். கடந்த சில மாதங்களாகவே யானைகள் கொடைக்கானல் வனப் பகுதியினை சூழ்ந்து வாழ்ந்து வருகின்றது. பேத்துப்பாறை, கனேசபுரம், அஞ்சுரான்மந்தை, புலியூர், கோம்பை, உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வந்தது. கொடைக்கானல் கீழ் மலைப் பகுதிகளிலும் யானைகள் அதிக அளவில் விவசாய விளை பொருட்களை சேதப்படுத்தி வந்துள்ளது.
 இந்த நிலையில் புலியூர் வனப் பகுதியில் யானை ஒன்று இறந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள மலை வாழ் மக்கள் கொடைக்கானல் வனத் துறைக்கு தகவல் தந்துள்ளனர். இதை அடுத்து வனத்துறையினர் யானை இறந்திருந்த இடத்திற்கு விரைந்தனர். இந்த பகுதியில் இருந்த யானை கூட்டத்தில் உள்ள 2 வயது மதிக்கத்தக்க பெண் யானை இது என்று வனத்துறையினர் தெரிவித்தனர். உடல் நலக் குறைவால்தான் இறந்துள்ளது இந்த யானை இறந்து சுமார் 15 தினங்களுக்கு மேல் இருக்கும் என்றும் இந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த கால்நடைத் துறை உதவி இயக்குநர் ஹக்கீம் தெரிவித்தார்.
 இறந்த இந்த யானைக்கு எதனால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது, என்றும் அல்லது வேறு காட்டு விலங்குகள் தாக்கி இந்த யானை இறந்துள்ளதா என்றும் பல கோனங்களில் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து