தாய்லாந்து குகையில் மீதமுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தீவிரம்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      உலகம்
thailand 2018 07 09

Source: provided

பாங்காங்க் : தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களையும், அவர்களது பயிற்சியாளரையும் மீட்க அடுத்தகட்ட மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் 10 கி.மீ. நீளமுடைய தாம் லுவாங் என்ற குகை உள்ளது. கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயது வரை உள்ள கால்பந்து அணியைச் சார்ந்த 12 சிறுவர்கள் இந்தக் குகைக்கு சாகசப் பயணம் சென்றனர். இந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் பயிற்சியாளர் ஒருவரும் சென்றிருந்தார். அப்போது கனமழை பெய்திட அவர்கள் குகையில் சிக்கிக் கொண்டனர்.

தாம் லுவாங் குகையில் 10 நாட்களுக்கும் மேலாக சிக்கிக் கொண்ட இவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் 6 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மீதமுள்ளவர்களை மீட்க மீட்புப் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து மீட்புப் பணி குழுவின் தலைவர் நவ்ரவ்சேக் சோட்டனகோர்ன் கூறும் போது, மீதமுள்ளவர்களை மீட்க அடுத்தகட்ட மீட்புப் பணி நடந்து வருகிறது. குகையில் சிறுவர்களை மீட்கும் போது ஆக்சிஜன் அளவு அங்கு குறைவாக இருப்பதால் அதனை சரி செய்யும் முயற்சியில் மீட்புப் பணி வீரர்கள் இறங்கியுள்ளனர்.

இதற்கு சில மணி நேரம் எடுக்கும் என்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட சிறுவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தாய்லாந்து உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து