சென்னை வந்தார் அமித்ஷா

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      அரசியல்
Amit Shah 2017 07 01

சென்னை, பாராளுமன்றத் தேர்தல் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்றனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கியுள்ளார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவற்றை சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திரங்களாகப் பிரித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று சென்னை வந்துள்ள அமித்ஷா, இந்த சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களையும் மாநிலத் தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து