அமர்நாத் யாத்திரையில் இதுவரை 14 பேர் பலி

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      இந்தியா
amarnath yatra 2018 7 9

ஜம்மு : காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். நிலச்சரிவு, உடல்நலக்குறைவு ஆகியவற்றால் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதி பர்ஹான் வானியின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரிவினைவாதிகள் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்ததையடுத்து  பாதுகாப்பு கருதி பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து பக்தர்கள் யாரும் அமர்நாத் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து