ஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணிநேரம் ரத்து

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      ஆன்மிகம்
TirumalaTirupatiDevasthanams 2018 7 9

திருப்பதி : ஏழுமலையான் தரிசனம் இன்று 5 மணிநேரத்துக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி வரும் 17-ம் தேதி திருமலையில் ஆனிவார ஆஸ்தானம் எனப்படும் புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது. அதனால் இன்று ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளது. அதையொட்டி இன்று காலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் சுத்தம் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து