பெருமாள் சிலை தலை மீது படம் எடுத்து ஆடிய பாம்பு - மதுரையில் பரபரப்பு!

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      ஆன்மிகம்
perumal statue snake 2018 7 9

மதுரை : மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் பூஜையின் நடுவே வந்த பாம்பு பெருமாள் சிலை மீது ஏறி நின்று காட்சியளித்தது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது. இங்கு பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்தவர் என்றும் வைகுண்டத்துக்கு வழிகாட்டி சென்றவர் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மந்திர எழுத்துக்களோடு காணப்படும் சக்கரத்தாழ்வார் இங்கு மட்டுமே உள்ளார் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த கோயிலானது, 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது கூடுதல் சிறப்பு ஆகும்.

இந்நிலையில் இந்த கோயில் பிரகாரத்திற்குள் நேற்று பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று ஒரு நாகப்பாம்பு பெருமாள் சிலை மீது ஏறிக் கொண்டது. இதனால் அங்கிருந்த பக்தர்கள், அர்ச்சகர்கள், மேலும் கோயிலுக்கு வந்தவர்கள் அனைவருமே பாம்பை வியப்புடன் பார்த்தனர். மேலும் சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து கொண்டனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து