முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி வட்டார போக்குவரத்து புதிய அலுவலகம் கட்டும் பணிக்கு பூமி பூஜை : அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அடிக்கல் நாட்டினார்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்,- சிவகாசி வட்டம், ஆனையூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்துத் துறை சார்பில், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து புதிய அலுவலகம் கட்டும் பணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்  தலைமையில், திருவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.மு.சந்திரபிரபா அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  கே.டி.ராஜேந்திரபாலாஜி   பூமி பூஜை செய்து   அடிக்கல் நாட்டினார்கள்.
பின்னர்,   பால்வளத்துறை   தெரிவித்ததாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிவகாசி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நவீன வசதிகளுடன், தரைத்தளம், முதல்தளம்; என இரண்டு தளங்களும், ஓட்டுநர் தேர்வு தளம் உள்ளடக்கிய 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.325.28 இலட்சங்கள் மதிப்பீட்டில் சிவகாசி வட்டார போக்குவரத்து புதிய அலுவலகம்; கட்டப்படவுள்ளது.
மேலும், இப்புதிய வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடத்தில் 584.40 சதுர மீட்டர் பரப்பளவில் கீழ்தளமும், 582.90 ச.மீ பரப்பளவில் மேல்தளமும் அமையவுள்ளது. புதிய வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடத்தின் கீழ் தளத்தில் எல்-காட் அறையும், பழகுநர் உரிம பதிவு (டுடுசு) அறையும், வட்டார போக்குவரத்து அலுவலர் அறையும், மோட்டார் வாகன ஆய்வாளர் அறையும், பிற அலுவலர்களுக்கான அறையும், மேல்தளத்தில் அலுவலக அறையும், காணொளி காட்சி அறையும், பதிவறையும் மற்றும் கழிப்பறையும் அமையவுள்ளது. மேலும், கட்டப்படவுள்ள புதிய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் 5175 சதுர மீட்டர் பரப்பளவில் ஓட்டுநர் தேர்வு தளம் மற்றும் நவீன முறையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தனி கணினி அறையை உள்ளடக்கிய கட்டிடமும் அமையவுள்ளது எனவும், இந்த புதிய வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடப்பணிகள் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என  பால்வளத்துறை அமைச்சர்  .கே.டி.ராஜேந்திரபாலாஜி   தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள்  நடராசன் (சிவகாசி),  .ரவிசந்திரன் (திருவில்லிபுத்தூர்),  .சந்திரசேகர் (விருதுநகர்), பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விருதநகர்)  மகேந்திரகுமார், வில்லிப்புத்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர்  .ராஜா, சிவகாசி வட்டாட்சியர்  .பரமானந்தராஜா, உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து