முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ச்சியாக 6 டி-20 தொடர்களை கைப்பற்றி இந்திய அணி சாதனை

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.

6 தொடர்கள்..

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் கோலி தலைமையில் பல்வேறு  சாதனைகளையும் படைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை புரிந்துள்ளது.

ரோகித் சதம்...

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தியா வெற்றி...

இதற்கு முன்னதாக, அயர்லாந்துடன் 2-0 என்ற கணக்கிலும், இலங்கை - வங்காள தேசத்துடன் முத்தரப்பு தொடரிலும், தென் ஆப்ரிக்காவுடன் 2-1 என்ற கணக்கிலும், இலங்கையுடன் 3-0 என்ற கணக்கிலும், நியூசிலாந்துடன் 2-1 என்ற கணக்கிலும் டி-20 தொடரை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து