கோச்சடையான் பட வழக்கை எதிர்கொள்ள லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      இந்தியா
SUPREMECOURT 2017 10 30

புதுடெல்லி: கோச்சடையான் பட வழக்கை எதிர்கொள்ள லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்புப் பணிக்காக லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு ஆட்-பீரோ விளம்பர நிறுவனம் கடன் அளித்திருந்தது. இந்நிலையில், வாங்கிய கடன் தொகையில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதமுள்ள தொகையைத் தரவில்லை என்றும் ஆட்-பீரோ நிறுவனம் அளித்த புகாரையடுத்து லதா ரஜினிகாந்துக்கு எதிராக அந்த நிறுவனம் தொடுத்த வழக்கை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

பின்னர் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நிலுவை தொகையை லதா ரஜினிகாந்த் வழங்காதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பி  வழக்கின் இறுதி விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எப்.ஐ.ஆர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிற பெங்களூர் நீதிமன்றத்தின் ஆணையை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. லதா ரஜினிகாந்த், பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்றும் சுப்ரீ்ம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து