முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூகசேவகர் விருதுக்கு 20-ம் தேதிக்குள் கருத்துரு அனுப்பலாம்: தமிழக அரசு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: மகளிரின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் விருதுக்கு வரும் 20-ம் தேதிக்குள் கருத்துருக்களை அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
2018-ம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்படவுள்ளது.

குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும்இருத்தல் வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையுடன் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநில அளவிலான உயர்மட்டக் குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து விருதுக்கு தகுதியான தனி நபர் மற்றும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும். விண்ணப்பதாரரின் கருத்துரு (தமிழ்-1 மற்றும் ஆங்கிலம்-1) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பெறப்பட வேண்டும். மாதிரி விண்ணப்பம் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் ஆகியவை என்ற இணையதள முகவரியில் காணலாம்.

எனவே அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அணுகி வருகின்ற 20.07.2018-க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து