முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலம் மெயின் அருவியில் ஆவி நடமாட்டமா? சமூக வலைத்தளங்களில் பரவும் படங்களால் பரபரப்பு:

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் ஆவி நடமாடுவதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிடும் படங்களால் சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள குற்றாலம் தன்னகத்து தெய்வீக அருவிகளின் சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிடும் போது குற்றாலத்தில் இதமான சாரல் மழையுடன் அனைத்து அருவிகளில் தண்ணீர் கொட்டுவது வழக்கம்.அருவிகளுக்கு பாய்ந்து நீர் பல்வேறு மூலிகைகளை தழுவி வருவதால் உடலுக்கு தெம்பும் புத்துணர்ச்சியும் ஏற்பட்டு நோய்கள் குணமடைகிறது.இதனால் ஒவ்வொரு ஆண்டும் சீசன்சமயத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து வந்து குளித்து கும்மாளமிட்டு மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கடந்த 5ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சாரல் மழையுடன் சீசன் களைகட்டி அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பி குளித்திடும் மெயின் அருவியில் ஆவி நடமாட்டம் இருப்பதாக பல்வேறு சமயங்களில் புதுமையான கட்டுக்கதைகள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை எற்படுத்தி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செங்கோட்டைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் குற்றாலத்திற்கு வந்து சீசனை மிகவும் ஜாலியாக அனுபவித்துள்ளனர்.அப்போது நண்பர்களில் ஒருவர் குற்றாலம் மெயின் அருவியை படம் எடுத்துள்ளார்.இதனை ஊருக்கு திரும்பிச் சென்று நண்பர்கள் சிலருக்கு வலைத்தளங்கள் மூலம் அனுப்பியபோது மெயின் அருவியில் ஆவி போன்ற உருவம் இருப்பது தெரிந்துள்ளது.இதையடுத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய இந்த படம் தற்போது மக்கள் மத்தியில் வெகு வேகமாக பரவி வருகிறது.அருவியில் ஆவி போன்ற உருவம் இருப்பது சமூக வலைத்தளங்கள் மூலமாக வேகமாக பரவியதை தொடர்ந்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றிடும் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.அதே சமயம் குறும்புக்காரர்கள் சிலரால் இந்த படம் கிராபிக்ஸ் செய்யப்பட்டு சுற்றில் விடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.எது எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு குற்றால சீசன் களைகட்டி இருப்பது சுற்றுலா பயணிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து