பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      தமிழகம்
Plus 2 result(N)

சென்னை : வரும் 16-ம் தேதி பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத்தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில்., 2018 மார்ச் / ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வினை எழுதிய அனைத்து மாணாக்கருக்கும் 16-ம் தேதி காலை10 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண்சான்றிதழ் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண்சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து