முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதலாக 67 வாக்குச்சாவடிகள் சேர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வினய் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் வினய் தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2019 மற்றும் பாராளுமன்றம் பொதுத்தேர்தல் 2019 ஆகியவற்றை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் வரைவுப்பட்டியல் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஏதேனும் கருத்துக்கள் அல்லது ஆட்சேபனைகள் தெரிவிக்க விரும்புபவர்கள் 9ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வரைவு பட்டியல் அடிப்படையில் வருவாய்த்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டதிலும் அரசியல் கட்சியினர் கொடுத்துள்ள கருத்துக்களின் அடிப்படையிலும் பரிசீலனை செய்யப்பட வேண்டிய வாக்குச்சாவடிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திலுள்ள மொத்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தற்போது 2039 வாக்குச்சாவடிகள் உள்ளது. அதில் தற்போது மேலும் 67 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.  இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் வரைமுறைகளின்படி தகுதியுள்ள தகுதியுள்ள  வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கு உரிய முன்மொழிவுகள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து