டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் பட்டியலில் டிரம்ப் முதலிடம்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      உலகம்
trump 2017 12 31

ஜெனிவா, டுவிட்டரில் பின் தொடர்பவர்கள் அதிகம் கொண்ட அரசியல் தலைவர்களில் முதலிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளார். இரண்டாவது இடத்தில் போப் பிரான்சிஸூம், மூன்றாவது இடத்தில் பிரதமர் மோடியும் உள்ளனர்.

சமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் கணக்கு வைத்துள்ளனர். பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர்கள் வெளியிடும் கருத்துகளை பார்க்கவும், பதிலளிக்கவும் பலரும் ஆர்வம் கொள்கின்றனர். இதனால் டுவிட்டரில் பிரபலங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பர்ஸான் கோகன் தகவல் தொடர்பு ஆய்வு நிறுவனம் இது குறித்து ஆய்வு செய்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவராக அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை 5.2 கோடி பேர் டுவிட்டரில் பின் தொடர்கின்றனர். இரண்டாவது இடத்தில் 4.75 கோடி பேருடன் போப் பிரான்சிஸ் உள்ளார். மூன்றாவது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து