முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவி, மருமகளுக்கு கொடுக்கும் சொத்துகளுக்கு வரி விதிக்க கூடாது: மேனகா காந்தி வலியுறுத்தல்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மனைவி, மருமகளுக்கு கொடுக்கும் சொத்து, பரிசுகளுக்கு வரி விதிக்கக் கூடாது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான கடமை நம் ஒவ்வொருவரிடையேயும் உள்ளது. வருமான வரிச் சட்டம் 64-வது ஷரத்தில் திருத்தம் கொண்டு வந்து மனைவிக்கும், மருமகள்களுக்கும் வழங்கும் சொத்து, பரிசுகளுக்கு வரி விதிக்கக் கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இதை மத்திய நிதித்துறை அமைச்சருக்கு நான் கோரிக்கையாக வைக்கிறேன். மனைவி, மருமகள்களுக்கு வழங்கப்படும் சொத்து, பரிசுகளுக்கு வரிவிதிக் காமல் இருக்கத் தேவையான திருத்தங்களை வருமான வரிச் சட்டத்தில் அரசு கொண்டு வரவேண்டும்.

மனைவி, மருமகளுக்கு சுயமான வருவாய் இருக்காது என்ற அனுமானத்தில் இந்தச் சட்டமானது 1960-களில் கொண்டு வரப்பட்டதாகும். இப்போது பெண்கள் சுயமாக சம்பாதிப்பதால் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால்தான் மனைவிகளுக்கும், மருமகள்களுக்கும் சொத்துகளை எழுதி வைக்க ஆண்கள் பயப்படுகிறார்கள். சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாயானது தங்களது வருமானத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்படும் என்பதாலேயே அஞ்சி, அவர்கள் சொத்துகளை பெண்கள் பெயருக்கு மாற்றத் தயங்கி வருகிறார்கள்.

எனவே இந்த சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்து, மனைவி, மருமகள்களுக்கு வழங்கப்படும் சொத்துகள், பரிசுகளுக்கு வரி விதிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து