சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 3 பேருடன் செல்பி - சமூக வலைதளங்களில் கண்டனம்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      இந்தியா
accident selfie 2018 7 11

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி மூன்று பேர் நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் போது அருகில் போய் அவர்களுடன் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

சாலை விபத்தில் சிக்கிய மூன்று பேரும் கடும் காயத்திற்கு அங்கேயே பலியாகியுள்ளனர். பலரும் இதனைப் படம்பிடித்த அவலத்தோடு, இவர் எடுத்துக் கொண்ட செல்பி கடும் கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் எழுப்பியுள்ளது. படம் பிடிக்கும் நேரத்தில் உரிய தகவலை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பியிருந்தால் அவர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து