முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

70 ஆண்டுகளாக விவசாயிகளை ஏமாற்றி வாக்கு வங்கியாக பயன்படுத்திய காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் தாக்கு

புதன்கிழமை, 11 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கும் நடவடிக்கைகளை எடுக்கவில்லை, அவர்களை ஏமாற்றி வெறும் வாக்கு வங்கிகளாக பயன்படுத்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி கூறியதாவது:-

கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகள் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைத்திருந்த கட்சி விவசாயிகளின் கடின உழைப்பை அங்கீகரிக்கவில்லை. விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. கட்சியும் ஒரேயொரு குடும்பத்தின் நலன்களுக்காகப் பாடுபட்டது.

காங்கிரஸ் கட்சி விவசாயிகளை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தியது. இப்போதுதான் மத்திய பா.ஜ.க. அரசு கடினமாக உழைத்து இந்தச் சூழலை மாற்ற பணியாற்றி வருகிறது. காங்கிரசும், கூட்டணி கட்சிகளும் தூக்கத்தை இழந்துள்ளனர். நாட்டில் விவசாயிகள் நிம்மதியாக உறங்குவது காங்கிரஸ் கட்சியினால் தாங்க முடியவில்லை.

விவசாயிகள் மட்டுமல்ல ராணுவ வீரர்களின் நலன்களுக்காகவும் எமது அரசு பாடுபட்டு வருகிறது, இதற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2022-ல் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும். அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம். விவசாயிகளுக்காக இன்னும் அதிக திட்டங்கள் கொண்டு வருவோம், இதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து