முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிலேயே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்கள் கேரளாவும். தமிழ்நாடும் தான். மதுரை கலெக்டர் வீரராகவராவ் பேச்சு

புதன்கிழமை, 11 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

மதுரை,- மதுரை மாவட்டம், தெப்பக்குளம் மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் 2018 விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .கொ.வீர ராகவ ராவ், கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்:
  1987ஆம் ஆண்டு ஜுலை திங்கள் 11ஆம் நாள் உலக மக்கள் தொகை 500 கோடியைக் கடந்து மேலும் அதிகரித்து வருவதை உலக மக்கள் அனைவரும் அறியும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜுலை திங்கள் 11ஆம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்தது.  இதைத் தொடர்ந்த 31வது உலக மக்கள் தொகை நாள் வரும் ஜுலை 11ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.  உலக மக்கள் தொகை 2017ஆம் ஆண்ட 755 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
 ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1.6 கோடி மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.
  தற்பொழுது மக்கள் தொகை பெருக்கம் பெரும் பிரச்சனையாக உள்ளது.  மக்கள் தொகை பெருக்கம் மனிதனின் அடிப்படை உணவு, உடை மற்றும் இருப்பிடப் பற்றாக்குறைகளை உண்டுபண்ணுகிறது.   தமிழகத்தின் தற்போதைய (2016) பிறப்பு விகிதம் 1000 மக்கள் தொகைக்கு 15.0 ஆகும்.  இந்தியாவிலேயே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்கள் கேரளாவும். தமிழ்நாடும் தான். 
 இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தின் வாசகம் ‘சிறுகுடும்பமே ஓர் அர்த்தமுள்ள எதிர்கால, ஆரம்பத்திற்கு உறுதணை’.  எனவே இந்தியாவின் எதிர்கால தூண்களாக விளங்கப்போகும் மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி சிறந்த முறையில் கல்வி கற்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.  உலக மக்கள் தொகை தினமான இன்று நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
    முன்னதாக 300 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக மக்கள் தொகை தினம் 2018 விழிப்புணர்வு பேரணியானது தெப்பக்குளம் மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரியிலிருந்து தொடங்கி அதே கல்லூரியில் முடிவடைந்தது. பின்னர் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
    விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குநர் (மருத்துவம்) மரு.கே.லதா   மதுரை தெற்கு வட்டாட்சியர்  .சுந்தரமுருகன்  , மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி முதல்வர்  கே.எஸ்.கோமதி  , மாவட்ட புள்ளியியல் உதவியாளர் (பொ) திரு.பா.பரசுராமன் அவர்கள், மாவட்ட குடும்பநலச்செயலகம் மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர்  .சௌ.செல்லமுத்து   உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து