ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் 24 கண்மாய்கள் சீரமைக்கப்பட்டு நிலங்கள் பயன்பெற உள்ளன சிவகங்கை கலெக்டர் லதா தகவல்

sivagangai news

 சிவகங்கை- சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  பொதுப்பணித்துறையின் மூலம் சருகனியாறு வடிநிலக் கோட்டம் மற்றும் கீழ்வைகை வடிநிலக் கோட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, ஆய்வு பயணம் மேற்கொண்டார். இந்த ஆய்வு பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர்  சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் பிரவலூர் ஊராட்சியிலுள்ள பிரவலூர் பெரியகண்மாயை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
          தமிழ்நாடு முதலமைச்சர்  விவசாயிகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பாசனக் கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர்; தேக்கி பயன்படுத்தும் வகையில் குடிமராமத்து பணியை துவக்கி உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டு அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் சருகனியாறு வடிநிலக் கோட்டம் மற்றும் கீழ்வைகை வடிநிலக் கோட்டத்தின் கீழ் 24 ஊராட்சிகளில் 24 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பாசன விவசாயிகள் சங்கம் மூலம் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள பாசனக் கண்மாயை குடிமராமத்துப் பணியில் சீர் செய்ய 10 சதவிகிதம் பங்குத் தொகை வழங்கியதும் அரசு 90 சதவிகிதம் கட்டணத்தை வழங்கி 100 சதவிகித திட்டத்திற்கு பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டு இந்தப் பணிகள் மிக வேகத்தில் செயல்பட்டு வருகிறது. காரணம் வருகின்ற மழை காலத்தை கருத்தில் கொண்டு இப்பணி விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கண்மாயின் உட்பகுதியில் மண் எடுத்து கரையை பலப்படுத்தப்படுகின்றன. மேலும் மடைகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சீரமைக்கப்படுகிறது. அதேபோல் கழுங்குப் பகுதியும் சீரமைக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி கண்மாயின் உட்புறப்பகுதிகளில் கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற செடி, கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு முழுமையாக சீர் செய்யப்படுகிறது. இதனால் மழை காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் தேங்குவது மட்டுமன்றி அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் நிலை உருவாகிறது. இத்திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளை காலதாமதமின்றி முழுமையாக செயல்பட்டு பயன்பெற வேண்டுமென்பதே அரசின் திட்டமாகும்.

      இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நல்ல பலன்பெறும் வகையில்   தமிழ்நாடு முதலமைச்சர்  இத்திட்டத்தை துவக்கியதன் மூலம் கிராமப் பகுதிகளிலுள்ள அனைத்து பாசனக் கண்மாய்களும் உடனடியாக சீர் செய்யப்படுவதுடன் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையும் தமிழக அரசு நிறைவேற்றி வருகின்றன. இத்திட்டத்தில்  கண்மாய்கள் சீரமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட 3395 பாசன விவசாய சங்க உறுப்பினர்கள் 2444.46 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும் அளவிற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப விவசாயிகள் இத்திட்டத்தினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்  க.லதா, தெரிவித்துள்ளார்.
       மேலும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வரும் மடப்புரம் பெரியகண்மாய் மற்றும் சக்கந்தி பெரியகண்மாய் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர்  பார்வையிட்டு பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
        இந்த ஆய்வின் போது சருகனியாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் .வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர்கள் மலர்விழி, ரமேஷ், இராசாராம், உதவிப்பொறியாளர்கள் கண்ணன், அமுதா, சிவகங்கை வட்டாட்சியர் ராஜா, சிவகங்கை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்  அருள்ஜோசப், பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து