முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ செலவுக்கான நிதியை இரட்டிப்பாக்க உறுப்பு நாடுகளிடம் டிரம்ப் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

பிரஸ்ஸல்ஸ்: நேட்டோ அமைப்பின் ராணுவச் செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கும்படி மற்ற உறுப்பு நாடுகளை அமெரிக்க அதிபர்  டிரம்ப் வலியுறுத்தினார்.

இதன் காரணமாக, அவருக்கும், பிற உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்த கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோ, கடந்த 1949-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் இந்த அமைப்பின் செயல்பாட்டுக்காக அந்த நாடுகள் போதிய அளவு நிதி ஒதுக்குவதில்லை என்றும், அதன் காரணமாக ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்புக்கான செலவுகளை அமெரிக்கா நியாயமற்ற முறையில் தோளில் சுமக்க வேண்டியிருப்பதாகவும் அதிபர்  டிரம்ப் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில், நேட்டோ அமைப்பின் வருடாந்திர மாநாடு, அதன் தலைமையகம் அமைந்துள்ள பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது. அப்போது, நேட்டோவின் பாதுகாப்பு செலவுகளுக்காக ஐரோப்பிய நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.

எனினும், அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் வற்புறுத்தியது உறுப்பு நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது.

அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக காரசாரமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து