முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதியில் ரூ.3.38கோடி செலவில் 15கண்மாய்களில் குடிமராமத்து திட்டத்திற்கான பூமிபூஜை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்:

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம் -மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் ரூ.3.38கோடி செலவில் 15கண்மாய்களில் நடைபெறவுள்ள குடிமராமத்து திட்டத்திற்கான பூமிபூஜையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் மக்கள் பெரிதும் பயனடையும் வகையில் நீராதாரங்களை மேம்படுத்திடும் வகையில் நீர்நிலைகளில் குடிமராமத்து மேற்கொண்டு புனரமைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இரண்டாவது கட்டமாக 1511கண்மாய்களை சீரமைத்திடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 15 கண்மாய்களை தமிழக நீர்வளஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்து செய்திட ரூ.3.38கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி திருமங்கலம் தொகுதியில் உள்ள கிண்ணிமங்கலம் கீழ்கண்மாய்,மேல்கண்மாய்,உரப்பனூர் பாப்பன்குளம் கண்மாய், உரப்பனூர் பிள்ளைகுளம் கண்மாய்,ஊராண்ட உரப்பனூர் கண்மாய்,ஜோதிடர் ஆலங்குளம் கண்மாய்,மறவன்குளம் கண்மாய் உள்ளிட்;ட 15கண்மாய்களில் நடைபெறவுள்ள குடிமராமத்து  திட்டத்திற்கான பூமிபூஜை விழா அந்தந்த கண்மாய்கரை பகுதியில் நேற்று காலை வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலை வகித்தார்.நீர்வளத்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி வரவேற்றார்.திரளான பொதுமக்களுடன் விவசாயிகளும் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்ட இந்த பூமிபூஜை விழாக்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு திருமங்கலம் தொகுதியிலுள்ள மேற்கண்ட கண்மாய்களில் 3.38கோடி செலவில் பொதுமக்கள் மற்றும் ஆயக்கட்டுதாரர்களின்  ஒத்துழைப்புடன் குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர் பொதுமக்களுக்கும் விவசாய பெருங்குடியினருக்கும் இனிப்புகள் வழங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தமிழக முதல்வராக எடப்பாடியார் பொறுப்பேற்று இந்த 17 மாதங்களில் பல்வேறு   நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.அதிலே முத்தாய்ப்பான திட்டமாக வண்டல் மண் வழங்குகிற திட்டம் மற்றும்  குடிமராமத்து திட்டத்திற்காக முதல் கட்டமாக  100கோடியில் 1200கண்மாய்கள்,இரண்டாவது கட்டமாக 328கோடியில் 1500க்கும் மேற்பட்ட கண்மாய்கள் குடிமராமத்து பணிகள் செய்யப்படவுள்ளது.இந்த கண்மாய்கள் எல்லாம் பன்னெடுங்காலமாக தூர்வாராமல் இருந்ததால்  நமக்கு கிடைக்கிற நீரை முழுமையாக பயன்படுத்திட முடியாத நிலை இருந்தது. தற்போது இந்த பகுதியில் மட்டும் பெரியார் பாசனவசதி பெற்றிடும் 15கண்மாய்களை  3.38கோடி செலவில் அம்மா அரசால் குடிமராமத்து செய்யப்படவுள்ளது.கடந்த 12ஆண்டுகளாக தொட்டியில் உள்ள தண்ணீரில் தான் கள்ளழகர் இறங்கியுள்ளார்.இந்த ஆண்டு சிறப்புடன் திட்டமிட்டு நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழைநீரை சேகரித்துவைத்து முதல்வரிடம் உத்தரவு பெற்று வைகை தண்ணீர் வருவதற்கும் அழகர் வருவதற்கும் சரியாக  இருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு பின் ஆற்றில்  அழகர் இறங்கிய வைபவத்திற்கு அம்மா அரசு அதிகாரிகளின் சிறப்பான செயல்பாடுகள் தான்.இந்த ஆண்டு குடிமராமத்து  திட்டத்தில் 15கண்மாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.எனவே மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்றிட பொதுமக்களாகிய உங்களது ஆதரவு தொடர்ந்திட வேண்டும் என்று பேசினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள்கே.மாணிக்கம்,எஸ்.எஸ்.சரவணன்,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார்,ராஜேந்திரன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் ஓம்கேசந்திரன், தமிழ்ச்செல்வம்,திருப்பதி, முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அனபழகன்,மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,அவை தலைவர் அன்னகொடி,துணை செயலாளர் சுகுமார், இணைசெயலாளர் சுமதிசாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து