முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரதமருடன் இந்திய வெளியுறவுச் செயலர் சந்திப்பு மீனவர் விவகாரம் குறித்து ஆலோசனை

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே கொழும்பில் சந்தித்தார். அப்போது, மீனவர் பிரச்னை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தலைமையிலான இந்தியக் குழுவினர், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள், தலைநகர் கொழும்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்தனர். அப்போது, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போரால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசின் நிதியுடன் செயல்படுத்தப்படும் வீட்டுவசதி திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது, இந்தியா - இலங்கை இடையே திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து