‘இன்றையக் காதல் டா’ படத்தை இயக்கும் டிஆர்.

சனிக்கிழமை, 14 ஜூலை 2018      சினிமா
t rajendar namitajpg

Source: provided

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் டி.ராஜேந்தர், இன்றைய காதலை பற்றி சொல்லும் விதமாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன், மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா, சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை, வீராசாமி ஆகிய பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்த ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான படைப்பு டி.ராஜேந்தரின் ‘இன்றையக் காதல் டா’.இதில் நமீதா வித்தியாசமான லேடி டான் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் பிரபல நட்சத்திரங்கள், நிறைய கதாநாயகர்கள், கதாநாயகிகள், இளம் நகைச்சுவை நடிகர்கள் ஆக பல புதிய முகங்களை அறிமுகம் செய்கிறார்கள். மற்றும் ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், உள்ளிட்ட பல நகைச்சுவை பட்டாளங்கள் நடிக்கிறார்கள்.

முழுக்க, முழுக்க இளமை சொல்லும் காதல் கதையாகவும், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், காதல்… காதல்… காதலை தவிர வேற ஒன்றும் இல்லை என்றும் உருவாக்க இருக்கிறார் டி.ராஜேந்தர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து