முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் - புடின் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் அமெரிக்கா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் தலையிட்டதாக ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டாலும், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும், ரஷிய அதிபர் புடினுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி  நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவும், அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசுவதற்கு புடின் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் டிரம்ப்பும், புடினும் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவு அமைப்பினர் தலையிட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்தச் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சில அமெரிக்க எம்.பி.க்கள் போர்க்குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து