முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் மனநல காப்பகத்திற்கு நிலம் அர்ப்பணிப்பு விழா

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்- ராமேசுவரத்தில்  தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் மனநல காப்பகத்திற்கு ராமேசுவரம் முன்னாள் நகர்மன்ற தலைவர் குடும்பத்தினர் இலவசமாக நிலம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நேற்று விவேகானந்தர் குடிலில் நடைபெற்றது.
   ராமேசுவரம் பகுதிக்கு அகல ரயில் போக்குவரத்து துவங்கப்பட்ட நாள் முதல் வெளிமாநிலம்,தமிழகப்பகுதிகளை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட மன நோயாளிகள் 100க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.இவர்கள் வருகையால் ராமேசுவரம் திருக்கோவில் பகுதியில் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வந்தனர்.இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின் பேரில் ராமேசுவரத்தில் தன்னார்வு அமைப்பு சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மன நல காப்பகம் தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு துவங்கப்பட்டனர்.இந்நிலையில் ராமேசுவரம் பகுதிக்கு நாளுக்கு நாள் மன் நோயாகளின் வருகை அதிகரித்து வந்தது.இவர்களை பாதுகாக்க போதுமான இட வசதிகள் இல்லாததால் ராமேசுவரம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜலீல் குடும்பத்தினரிடம் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த  சுவாமி விவேகானந்தர் குடில் சுவாமி பிரணவானந்தா்  நிலம் கேட்டு கோரிக்கை வைத்தார்.அதன் பேரில் நகர் மன்ற முன்னாள் தலைவர் குடும்பத்தில் அவரது தந்தை ராமேசுவரம் நகர் தி.மு.க.முன்னாள் செயளாளர் ஜான்பாய் அவர்கள் மன நல காப்பகத்திற்கு குடும்பத்திற்கு சொந்தமான 18 செண்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுத்து வந்தார்.அதன் பேரில் நிலம் மன நல காப்பத்திற்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சி ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள சுவாமி விவேகானந்தர் குடில் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு ராமேசுவரம் நகர் தி.மு.க.முன்னாள் செயளாளர் ஜான்பாய் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில்  சுவாமி விவேகானந்தர் குடில் சுவாமி பிரணவானந்தா் வரவேற்றார்.நிகழ்ச்சியி்ல் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஜான்பாய் மற்றும் அவரது மனைவி மும்தாஜ் ஆகியோர்கள் மனோலயா நிர்வாக இயக்குனர் மணிகண்டனிடம் நிலம் வழங்குவதற்கான உறுதி தபாலை வழங்கினார்கள்.பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனநலகாப்பகத்தில் தங்கியுள்ள 40க்கும் மேற்பட்ட மனநோயாளிகளுக்கு புத்தாடை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் ராம்கோ  பொருப்பாளார் வேடராஜன், முன்னாள் கவுன்சிலர் குமரேசன்,மனோலயா மெய்ஞானகுரு,முத்துராமன்,விஜயலட்சுமி,சாருமதி, மனோன்மனி,முருகபுபதி,சமூக ஆர்வாளர் தில்லைபாக்கியம்,வழக்கறிஞர் ராஜசேகர், மற்றும் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து