முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்  நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய்}ஜானி பேர்ஸ்டோவ் சிறப்பான துவக்கத்தை தந்தனர். 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 38 ரன்களை எடுத்த பேர்ஸ்டோவ், 40 ரன்களை எடுத்த ஜேஸன்ராய், ஆகியோர் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோ ரூட்}கேப்டன் மோர்கன் ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்த மோர்கன், யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பென்ஸ்டோஸ்க் 5, ஜோஸ் பட்லர் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் மொயின் அலி 12 ரன்களுக்கு சாஹல் பந்தில் வீழ்ந்தார். அப்போது 41.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 239 ரன்களையே எடுத்திருந்தது. ஜோ ரூட் சதம்: பின்னர் ஜோ ரூட்}டேவிட் வில்லி ஆகியோர் கடைசி கட்டத்தில் அடித்து ஆடினர். 50 ரன்கள் எடுத்த வில்லி ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

1 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 113 ரன்களுடன் ஜோ ரூட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 322 ரன்களை குவித்தது. இந்திய தரப்பில் குல்தீப் 3, உமேஷ், சாஹல், பாண்டியா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

323 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் ரோஹித் சர்மா}ஷிகர் தவன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோஹித் 15, தவன் 36, ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அப்போது 10.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து இந்தியா 60 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

பின்னர் கேப்டன் கோலி}சுரேஷ் ரெய்னா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 45 ரன்கள் எடுத்த கோலி, மொயின் பந்தில் எல்பிடபிள்யு முறையில் வீழ்ந்தார். அப்போது இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 140 ரன்களுக்கு தடுமாறி கொண்டிருந்தது. பின்னர் தோனி களமிறங்கி நிதானமாக ரன்களை சேகரித்தார். ஆனால் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் வெளியேறினர். ரெய்னா 46, தோனி 37, பாண்டியா 21, உமேஷ் 0, குல்தீப் 8, கெüல் 1, சாஹல் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் லியம் பிளங்கெட் 4, வில்லி, ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், மார்க் உட், மொயின் அலி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. இதன் மூலம் தொடர் தற்போது 1}1 என சமனில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து