முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் பகுதியில் கொய்யாபழம் சீசன் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மாம்பழசீசன் ஒய்ந்தநிலையில் தற்போது கொய்யாபழம் சீசன் அறுவடை தொடங்கி உள்ளது. நத்தம் வட்டாரத்தில் உள்ள வத்திபட்டி,பரளி,காசம்பட்டி,பாலப்பநாயக்கம்பட்டி,முளையூர்,செல்லப்பநாயக்கபட்டி,புன்னபட்டி,கோவில்பட்டி,சேர்வீடு,லிங்காவாடி,மலையூர் உள்ளிட்ட பல கிராமபகுதிகளில் தோட்டங்கள் அமைத்து விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு இறவைதண்ணீரும்,ஆழ்குழாய் தண்ணீரும் பயன்படுத்தபடுகிறது. மேலும் ஆண்டிற்கு 3 அல்லது 4 முறை மகசூல் தரும் ஒட்டு கொய்யாமரங்கள் தற்போது ஜுலை மாத முதல் வாரத்தில் இருந்து அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது.
        இந்த கொய்யாபழங்கள் நத்தம் சந்தையில் பிளாஸ்டிக் கூடையில் வைக்கபட்ட 20 கிலோ பழங்கள் ரூ.300 முதல் ரூ.350 வரை விலைபோகிறது. அதே பழங்கள் சில்லரையாக விற்பனையாகும் போது ஒரு கிலோ பழங்கள் ரூ.25 முதல் ரூ.45 வரையிலும் போகிறது.
    இது குறித்து கொய்யா விவசாயிகள் கூறியதாவது& நத்தம் பகுதியில் விளைச்சல் பெறும் கொய்யாபழங்களுக்கு தனி மவுசு உண்டு. இந்த பழங்கள் அதிக சுவையும்,மனமும் நிறைந்தாகும், மருத்துகுணம் நிறைந்த கொய்யாபழம் எந்தவிதமான பக்கவிளைகள் இல்லாமல் பயன்தரக்கூடிய பழங்களில் ஒன்றாகும். இந்த பழம் ஆகஸ்ட் மாதம் வரை சீசன் இருக்கும். சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கொய்யாசாகுபடி உள்ளது. பருவமழை கை கொடுத்தல் இன்னும் அதிக அளவில் சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது-.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து