முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி வாரியர்ஸ் அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

சென்னை : சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வென்றது. திருச்சியின் சந்திரசேகர் கணபதி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார்.

டாஸ் வென்ற சேப்பாக் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. திருச்சி அணி தரப்பில் பரத் சங்கர், பாபா இந்திரஜித் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

பரத்சங்கர் 23, அரவிந்த் 1, பாபா இந்திரஜித் 53, சுரேஷ்குமார் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சந்திரசேகர் கணபதி 26 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை. மொத்தம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து திருச்சி வாரியர்ஸ் 180 ரன்களை குவித்தது. சேப்பாக் தரப்பில் விஷால் 2, முருகன் அஸ்வின், சித்தார்த் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். பின்னர் ஆடிய சேப்பாக் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

(கோபிநாத் 11, அருண்குமார் 1, கங்கா ஸ்ரீதர் ராஜு 15, எஸ்.கார்த்திக் 5, பாஸ்கரன் ராகுல் 53, உத்திரசாமி சசிதேவ் 30, முருகன் அஸ்வின் 8, ஆர்.விஷால் 7, சித்தார்த் 2), சன்னிகுமார் 11 (ஆட்டமிழக்கவில்லை). பந்துவீச்சு: சந்திரசேகர் கணபதி 5, கண்ணன் விக்னேஷ் 2, சோனுயாதவ் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து