முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆயிரம் ரன்கள், 300 கேட்சுகளுடன் தோனியின் சாதனை பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 2-ஆவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில்  பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 113 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரில் சமநிலை பெற்றது. எனவே 3-ஆவது போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி இப்போட்டியில் இரு புதிய சாதனைகளைப் படைத்தார். அவற்றின் விவரம் பின்வருமாறு:

10 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-ஆவது இந்தியர்:
• சச்சின் டெண்டுல்கர் - 463 போட்டிகள் - 18,426 ரன்கள்
• சௌரவ் கங்குலி - 311 போட்டிகள் - 11,363 ரன்கள்
• ராகுல் டிராவிட் - 344 போட்டிகள் - 10,889 ரன்கள்
• மகேந்திர சிங் தோனி - 320 போட்டிகள் - 10,004 ரன்கள
அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்:
• குமார் சங்ககாரா - 360 போட்டிகள் - 13,341 ரன்கள்
• மகேந்திர சிங் தோனி - 320 போட்டிகள் - 10,004 ரன்கள்
• ஆடம் கில்கிறிஸ்ட் - 282 போட்டிகள் - 9,410 ரன்கள
10 ஆயிரம் ரன்கள் கடந்தவர்களின் சிறந்த சராசரி:
• மகேந்திர சிங் தோனி - 51.30
• ஜாக்குவஸ் கலீஸ் - 45.45
• ரிக்கி பாண்டிங் - 42.74
• சச்சின் டெண்டுல்கர் - 42.37
• சௌரவ் கங்குலி - 41.32
குறைந்த இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள்:
• சச்சின் டெண்டுல்கர் - 259
• சௌரவ் கங்குலி - 263
• ரிக்கி பாண்டிங் - 266
• ஜாக்குவஸ் கலீஸ் - 272
• மகேந்திர சிங் தோனி - 273

இவற்றில் இதர வீரர்கள் அனைவரும் முதல் வரிசை வீரர்களாகவே இருந்தவர்கள். அதிலும் குறிப்பாக முதல் 3 இடங்களில் களமிறங்கியவர்கள். ஆனால் தோனி, பெரும்பாலும் 5 அல்லது 6-ஆவது இடங்களிலேயே களமிறங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் புதிய சாதனைப் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 300 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆவார். மேலும் சர்வதேச அளவில் 4-ஆவது வீரராக உள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர்கள்:
• ஆடம் கில்கிறிஸ்ட் - 417
• மார்க் பௌச்சர் - 402
• குமார் சங்ககாரா - 383
• மகேந்திர சிங் தோனி - 300

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து