முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ: மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.

21-வது ஃபிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி துவங்கியது. இதில் 32 அணிகள் பங்கேற்று விளையாடியது. கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக கருதப்பட்ட அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகள் வெளியேறிய நிலையில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிவரை முன்னேறியது.

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன் விளையாடினர். ஆட்டம் தொடங்கிய 17-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியை சேர்ந்த மரியோ மண்ட்ஸ்க் முதல்கோலை போட்டார். பின்னர் குரோஷிய அணி அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 27வது நிமிடத்தில் இவான் பெரிசிக் முதல்கோலை போட்டார். இதனால் இரு அணிகளும் சமன்நிலையில் இருந்தது.

இதையடுத்து ஆட்டம் சூடுபிடித்தது. 2வது கோலை யார் அடிப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. பிரான்ஸ் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த அதற்கு நல்ல பலன்கொடுத்தது. 37-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல்போட பிரான்ஸ் முன்னிலை பெற்றது. பிரான்ஸ் வீரர் லூகாஸ் கோர்ணான்டஸ் 2வதுகோலை போட்டார். முதல் பாதிவரை பிரான்ஸ் 2க்கு 1 என்று முன்னிலையில் இருந்தது. 2வது பாதி ஆட்டம் தொடங்கியது இதில் குரோஷியா பிரான்ஸ்க்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரான்ஸின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. பிரான்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை பரிசாக அளித்தனர். இறுதியில் பிரான்ஸ் 4க்கு 2 என்று முன்னிலை பெற்று வெற்றியை ருசித்தது. இதன் மூலம் பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டுக்கு பிறகு 2வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. இறுதிவரை குரோஷிய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் 40 லட்சம் மக்கள்தொகையை கொண்ட குரோஷியா 5 முறை உலகக்கோப்பையில் விளையாடியபோதிலுலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது பாராட்டுக்குரியது. 135 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்திய கால்பந்து அணியால் தகுதிச்சுற்று போட்டியில் கூட வெற்றிபெற முடியவில்லை என்பது வருத்தம் கலந்த உண்மை.

பிரான்ஸ்
பிரான்ஸ் அணி கடந்த 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் 2006-ம் ஆண்டு இறுதி சுற்றுவரை முன்னேறியிருந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வெற்றிபெற்றதன் மூலம் 2வது முறையாக உலகக்கோப்பையை பிரான்ஸ் வென்றது.

குரோஷியா
குரோஷியாஅணி 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடம் பிடித்தது. தற்போது முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..?
உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள அணிகளுக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்பது தெரியுமா. உலகின் மிகப் பெரியத் திருவிழா என்று உலகக் கோப்பை கால்பந்து கூறப்படுவதற்கு, ஃபிபாவில் உறுப்பினர்களாக உள்ள 211 நாடுகளில், பல்வேறு தகுதிச் சுற்றுக்குப் பிறகு 32 நாடுகள் மட்டுமே பங்கேற்பது மட்டும் காரணமல்ல. அனைத்து கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் பங்கேற்பதுடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதை பார்ப்பதும் முக்கிய காரணம். அதேபோல் மிகப் பெரிய பரிசுத் தொகை கொண்டதாக உள்ளதாலும், கால்பந்து உலகக் கோப்பைக்கு எப்போதும் தனி மவுசுதான். இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. அதில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த நாடு கூட குறைந்தபட்சம், ரூ.53 கோடி ரூபாயுடன் செல்கின்றன. 21வது ஃபிபா உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 2680 கோடி ஆகும். இதில் கோப்பையை வெல்லும் அணி ரூ. 255 கோடி, இரண்டாவது இடம் பிடிக்கும் அணி ரூ. 188 கோடி பரிசுத் தொகையை பெறும். மூன்றாவது இடம் பிடிக்கும் அணி ரூ. 161 கோடி, நான்காவது இடம் பிடிக்கும் அணி ரூ. 147 கோடி பரிசுத் தொகையைப் பெறும். காலிறுதி சுற்றில் விளையாடிய மற்ற நான்கு அணிகளுக்கு தலா - ரூ. 107 கோடி கிடைக்கும். நாக் அவுட் சுற்றில் விளையாடிய மற்ற 8 அணிகளுக்கு தலா - ரூ. 80 கோடி கிடைக்கும். முதல் சுற்றில் வெளியேறிய 16 அணிகளுக்கு தலா - ரூ.53 கோடி. இதைத் தவிர 32 நாடுகளுக்கும், போட்டிக்குத் தயாராவதற்காக தலா ரூ.8.5 கோடி கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து