முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.இ. கலந்தாய்வை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரும் மனு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பி.இ. கலந்தாய்வை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2018-19-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சற்று தாமதமாகத் தொடங்கப்பட்டது. அதாவது ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் காரணமாக, பி.இ. கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இயலாமல் போனது.

அது மட்டுமின்றி, மீதமுள்ள 20 நாள்களில் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலாது என்பதால், கூடுதல் கால அவகாசம் கேட்டும், பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்க அனுமதிக்கக் கோரியும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பி.இ. கலந்தாய்வை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து