முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்து உலக கோப்பை போட்டியில் சாம்பியன்: பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு - குரோஷியாவுக்கு ரூ.188 கோடி பரிசுத்தொகை

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : கால்பந்து உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து, பிரான்சு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 14-ம் தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றை தாண்டவில்லை. 5 முறை சாம்பியனான பிரேசில் கால் இறுதியுடன் முடங்கியது. முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் 2-வது சுற்றுடன் உதைப்பட்டு நடையை கட்டின.

2-வது முறையாக சாம்பியன்

ஐரோப்பிய அணிகளான முன்னாள் சாம்பியன் பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளில் உலக கிரீடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பிரான்ஸ் அணி பட்டம் வென்று இருந்தது. தோல்வியே சந்திக்காமல் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த குரோஷியாவின் கனவு, பிரான்ஸ் வீரர்கள் மூலம் தகர்ந்து போனது. சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடம் பிடித்த குரோஷியாவுக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடினர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திரளான ரசிகர்கள் திர்ண்டனர். பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர். 1998 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது, 2-வது முறையாக பிரான்சு உலககோப்பையை வென்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து