முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்பட டிரம்ப் - புடின் விருப்பம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ஹெல்சிங்கி: சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின்  ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா -ரஷ்யா உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தவும் அவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.

அமெரிக்கா - ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் சந்தித்துப் பேசுவது என்று டிரம்ப்பும், புடினும் முடிவு செய்தனர். இதன்படி, ஹெல்சிங்கியில் டிரம்பும், புடினும்  சந்தித்துப் பேசினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு, சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த இரு தலைவர்களும் உறுதி எடுத்தனர். மேலும், உலக விவகாரங்களில் அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு டிரம்ப்பும், புடினும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். ரஷ்ய அதிபர் புடின் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிடவில்லை. அதேபோல், அமெரிக்காவின் உள்விவகாரங்களில் தலையிடும் திட்டமும் ரஷ்யாவிடம் கிடையாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து