முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை தாக்குதலில் ஈடுபட யாருக்கும் உரிமையில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை அனுமதிக்க முடியாது என்றும், வன்முறை நிகழ்ந்தால் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை தடுக்க மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் ஆலோசனை கூறியுள்ளது.

மக்களிடையே அச்சம் நிலவினால் அதனை தீர்க்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தைக் கையிலெடுக்க யாருக்கும் உரிமையில்லை. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து