கடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி நடிகர் சூர்யா உற்சாகம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      சினிமா
Youngest lion 2018 07 17

சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரர் சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கண்டுகளித்துள்ளார். இதையடுத்து டுவிட்டரில் இந்தப் படத்தைப் பாராட்டி அவர் எழுதியதாவது:
சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான சின்னபாபு (தமிழில் கடைக்குட்டி சிங்கம்) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில் நம் பழக்க வழக்கங்களை மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்த நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் டுவிட்டரில் வெங்கையா நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நாட்டு மக்களின் பெருமதிப்புக்குரிய தாங்கள், எங்களின் படைப்பான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தைப் பார்த்து மனம் திறந்து பாராட்டியது, எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும், தங்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் என்று கூறியுள்ளார்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து