முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் - புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. வங்கிக் கடன் மோசடி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

காங்கிரஸ் திட்டம்

ராஜ்யசபா துணைத் தலைவராக இருந்த காங்கிரசை சேர்ந்த பி.ஜே.குரியனின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளில், அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இன்று பாராளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை பல்வேறு கட்சியை சேர்ந்த, எம்.பி.க்கள் சந்தித்து பேசி ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்வு குறித்து விவாதித்தனர்.  இதற்கிடையே, வங்கி கடன் மோசடி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவற்றை எழுப்பி சபையில், அரசுக்கு எதிராக குரல் எழுப்ப, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், மழைக் கால கூட்டத்தொடரின் முதல் நாளே சபையில் கடும் அமளி ஏற்படும் என்று தெரிகிறது.

ஆலோசனை...

இதற்கிடையே கிட்டத்தட்ட ஒரு மாதம் நீடிக்கும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,  அனைத்து கட்சி தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக பாராளுமன்றம் இன்று கூடுவதை முன்னிட்டு அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அறிவுரை...

அப்போது பாராளுமன்ற கூட்டத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து எம்.பி.க்களுக்கு இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோர் அறிவுரை வழங்கினர். அணை பாதுகாப்பு மசோதா மற்றும் உயர் கல்வி ஆணையம் ஆகியவற்றுக்கு கூட்டத் தொடரில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனத் தெரிகிறது. கடந்த முறை பாராளுமன்றம் நடந்த போது காவிரியில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்கும் பொருட்டு அந்த பிரச்சினை தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளமன்ற இரு அவைகளையும் முடக்கியது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து