முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை

புதன்கிழமை, 18 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆலோசனை
ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதியை நிறுத்துவது தொடர்பாக இந்திய மற்றும் அமெரிக்க உயர்மட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, பெட்ரோலியத்தை இறக்குமதி செய்வதில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுச் செயலாளர் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

அறிவுறுத்தல்
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா கடந்த மே மாதத்தில் விலகியது. இதையடுத்து, ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்தார். ஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதியை நவம்பர் 4-ம் தேதியுடன் முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இல்லாவிட்டால், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலைப்பாட்டை...
இந்நிலையில், அமெரிக்க நிதித் துறை துணை அமைச்சர் மார்ஷல் தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது. டெல்லியில் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே-வை இந்தக் குழு சந்தித்தது. இதேபோல, நிதியமைச்சக மூத்த அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியது. அப்போது, இந்தியாவின் நிலைப்பாட்டை கோகலே எடுத்துக் கூறியதாகவும், இறக்குமதி தடையிலிருந்து இந்தியாவுக்கு சலுகை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து